இத்தாலியில் விராட் - அனுஷ்கா திருமணம்?

இத்தாலியில் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி விராட் கோலி அனுஷ்கா திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.

இதுகுறித்து டைம்ஸ்நவ் ஆங்கில ஊடகத்தில் வெளியான தகவலின் படி, வரும் டிச.12 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின்
விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெறவுள்ளதாக ஒரு செய்தி உலா வருவதாகவும்,
இந்த திருமணம் ஒரு ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ஆக இருக்கும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் - அனுஷ்கா திருமணம் நடைபெறலாம் என்றும், இந்திய ஊடகங்களின்
பார்வையிலிருந்து விலகியிருக்கவே தொலைதூரத்தில் திருமணம் நடக்கும் என்றும், வருகின்ற டிச.9 முதல் 12 ஆம் தேதி வரை
திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் பேசப்படுவதாக டைம்ஸ்நவ் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.