வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 205 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 149.05 புள்ளிகள் உயர்ந்து 32,746.23 புள்ளிகளாக உள்ளது. மூலதன பொருட்கள், மின்சாரம், எண்ணெய் & எரிவாயு மற்றும் பொதுத்துறை நிறுவனம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.20% வரை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 49.25 புள்ளிகள் அதிகரித்து 10,093.35 புள்ளிகளாக உள்ளது.டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, ஹீரோ மோட்டோ கார்ப், அதானி துறைமுகம், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, இந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல், என்டிபிசி, பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, எஸ்.பி.ஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவன பங்குகள் விலை 1.32% வரை உயர்ந்து காணப்பட்டது.ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.52% சரிந்துள்ளபோது, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.10% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 1.27% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.16% வரை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.