ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிட மொத்தம் 145 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். செவ்வாய்க்கிழமை நடந்த பரிசீலனையில், நடிகர் விஷால், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா உள்ளிட்ட 73 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மதுசூதனன், மருதுகணேஷ், டிடிவி தினகரன் உள்ளிட்ட 72 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதனிடையே மனு ஏற்கப்பட்டோர் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற பிற்பகல் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஆர்.கே.நகரில் பதிவான வாக்குகள் டிசம்பர் 24-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.