போச்சம்பள்ளியில் தக்காளி கிலோ ₹10க்கு விற்பனை

போச்சம்பள்ளி:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளி, மத்தூர், புலியூர், காரிமங்கலம், திருப்பத்தூர் ஆகிய பகுதியில் உள்ள மண்டிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 மாதமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால், மண்டிகளுக்கு வரத்து குறைந்து அதிகபட்சமாக ஒரு கிலோ ₹50 வரை விற்றது. இந்நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் சமீபகாலமாக பெய்து வரும் தொடர் மழையால், தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. மண்டிகளுக்கும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.  கடந்த சில தினங்களாக, தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வாரம் ₹25க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி, தற்போது ₹10 ஆக சரிந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.