கொடைக்கானல் ஏரியில் சுற்றுலாபயணிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம்

கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் நகர் மத்தியில் நட்சத்திர வடிவிலான ஏரி உள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இந்த ஏரியில் சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக அமலக்கொடி எனப்படும் ஒருவகை செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. ஏரி முழுவதும் படர்ந்துள்ள இந்த கொடியில் சுற்றுலாப் பயணிகள் இயக்கும் படகுகளின் துடுப்புகள் அடிக்கடி சிக்கி கொள்கின்றன.கொடிகளில் சிக்கும் துடுப்புகளை விடுவிக்க முயலும்போது, படகில் உள்ள சுற்றுலா பயணிகள் ஏரியில் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சுற்றுலா துறையினர் கண்டும், காணாமல் உள்ளனர். இது குறித்து சமூகஆர்வலர்கள் சிலர் கூறும் போது, ஏரியில் வளர்ந்துள்ள அமலக்கொடிகள் கெண்டை மீன்களின் விருப்ப உணவாகும். தற்போது ஏரியில் கெண்டைமீன்கள் இல்லாததால் அமலக்கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மீன் வளத்துறையினர் ஏரியில் அமலக்கொடியை விரும்பி உண்ணும் கெண்டை மீன்குஞ்சுகளை அதிகளவில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் அமலக்கொடியின் வளர்ச்சியை தடுக்கலாம் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.