பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பைக்கை பாடையில் கட்டி ஆர்ப்பாட்டம்

வந்தவாசி : பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டித்தும் உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற கோரியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியவசிய பொருட்கள் விலை உயர்ந்துவருவதை தடுக்க வேண்டியும்,  ஒன்றிய தொகுப்பில் இருந்து மாதம் தோறும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை கூடுதலாக வழங்க வேண்டியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று வந்தவாசி வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெள்ளார்- தேசூர் ஆகிய பகுதிகளில் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு வட்டார தலைவர் வே.சிவராமன் தலைமை தாங்கினார். சிவக்குமார், ராதகிருஷ்ணன், பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக பைக்குக்கு மாலை அணிவித்து பாடையில் கட்டி ஊர்வலமாக எடுத்து சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.செய்யாறு: செய்யாறு பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சி.பிஎம் வட்டாரச் செயலாளர் டி.வெங்கடேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் எ.குப்பன், சிபிஐ வட்டார செயலாளர் என்.பத்ராச்சலம் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சங்கர், மாரிமுத்து, ஆனந்தன் முன்னிலை வகித்தனர். 5 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.