ஜுவென்டசை வீழ்த்தியது பார்சிலோனா

பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் டி பிரிவு லீக் ஆட்டத்தில், பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள கேம்ப் நோ ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 45வது நிமிடத்தில் கோல் அடித்து 1-0 என முன்னிலை கொடுத்தார். ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் ராக்கிடிச் கோல் அடிக்க, பார்சிலோனா 2-0 என முன்னிலையை அதிகரித்தது.தொடர்ந்து ஜுவென்டஸ் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய பார்சிலோனா அணி, 69வது நிமிடத்தில் மெஸ்ஸி மேலும் ஒரு கோல் அடிக்க 3-0 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. ஜுவென்டஸ் கோல் கீப்பர் கியான்லுகி பப்பானுக்கு எதிராக மெஸ்ஸி முதல் முறையாக கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் அவர் 27 வெவ்வேறு கிளப் அணிகளுக்கு எதிராக கோல் அடித்துள்ளார். இந்த வரிசையில் ரால் 33, கிறிஸ்டியானோ ரொனால்டோ 31, இப்ராமோவிச் 29, கரிம் பென்ஸிமா 27 முன்னிலை வகிக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.