இந்தியா சிவப்பு திணறல்

கான்பூர்: இந்தியா நீலம் அணியுடனான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (4 நாள் ஆட்டம்), இந்தியா சிவப்பு அணி அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறியது. கான்பூர், கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் (பகல்/இரவு), டாசில் வென்ற இந்தியா சிவப்பு அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்கள் பாஞ்சால் 36, சாட்டர்ஜி 34 ரன் எடுத்தனர். ராகுல் சிங் 7 ரன்னில் வெளியேற, கார்த்திக், ரிஷப் பன்ட் தலா 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறிய நிலையில், உறுதியுடன் விளையாடிய பாபா இந்திரஜித் அரை சதம் அடித்தார்.இந்தியா சிவப்பு அணி 65 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்திருந்தது. இந்திரஜித் 54, பாசில் தம்பி 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர். நீலம் அணி பந்துவீச்சில் ராஜ்பூத் 3 விக்கெட் கைப்பற்றினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.