ரயிலில் அடையாள சான்றாக ‘எம்-ஆதார்’ காட்டினால் போதும்

புதுடெல்லி: ரயிலில் பயணம் செய்பவர்கள் அடையாளச்சான்றாக ஸ்மார்ட்போனில் எம்-ஆதார் காட்டினால் போதும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயிலில் பயணிப்பவர்கள் தங்களுக்கென எடுத்த டிக்கெட்டில்தான் பயணம் செய்கிறோம் என்பதையும், வயதையும் நிரூபிக்க  டிக்கெட் பரிசோதகரிடம் அடையாளச்சான்று சமர்ப்பிக்க வேண்டும். பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்டவை இதற்கு ஏற்கப்படுகின்றன.  இவற்றில் ஆதார் அட்டையை எடுத்துச்செல்வதற்கு பதிலாக ஸ்மார்ட்போன்களுக்கு எம்-ஆதார் என்ற ஆப்சை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்சை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினால் போதுமானது என ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.