பாமக சார்பில் 17ம் தேதி சமூக நீதி மாநாடு: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எவரும் செப்டம்பர் 17ம் தேதியை மறக்க முடியாது மறக்கவும் கூடாது. காரணம் அது பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் பிறந்தநாள் மட்டுமல்ல. தமிழகத்தில் இன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற தனி வகுப்பு இருக்கிறது. அப்பிரிவைச் சேர்ந்த மக்கள் கல்வி கற்று, வேலையில் சேர்ந்து ஓரளவு முன்னேற முடிந்திருக்கிறது. என்றால் அதற்கு காரணம் அன்று 21 தியாகிகள் தங்களின் இன்னுயிரை ஈந்து பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீடு தான். அந்த தியாக திருவுருவங்களின் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதி போற்றிப் பெருமைப்படுத்துகிறோம். இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கு 30வது ஆண்டு நினைவு நாள் என்பதால் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வரும் 17 ம் தேதி 4 மணிக்கு விழுப்புரம் புறவழிச்சாலை ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை மிகப்பெரிய அளவில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது. எனவே, சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும், போராடிப் பெற்ற சமூகநீதியை பாதுகாக்கவும் தான் விழுப்புரத்தில் வரும் 17 ம் தேதி மிகப்பெரிய அளவில் சமூகநீதி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.