மகளிர் ஆணைய பதவி தமிழக அரசுக்கு ஐகோர்ட் கெடு

மதுரை: மாநில மகளிர் ஆணைய தலைவி மற்றும் உறுப்பினர் பதவிகளை கோரி தொடரப்பட்ட வழக்கு, ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், தலைவர் பதவிக்கு 167 பேரும், உறுப்பினர் பதவிக்கு 200 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்து தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் விரைவில் நிரப்பப்படும்’ என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நவ. 17க்குள் நிரப்ப அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.