பேரணாம்பட்டு அடுத்த முதுகூரில் குட்டியுடன் 7 யானைகள் அட்டகாசம்: பயிர்கள் சேதம் பொதுமக்கள் பீதி

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே குட்டியுடன் 7 யானைகள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த முதுகூர்பாத்தபாளையம் பகுதியில் சுமார் 300 பேர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாயிகள். நேற்று அதிகாலை 3 மணியளவில் யானைகள் பிளிறும் சத்தம் கேட்டு பொதுமக்கள் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது விவசாய நிலத்தில் ஒரு குட்டியுடன், 7 யானைகள் பயிர்களை நாசம் செய்து கொண்டிருந்தது.  இதைப்பார்த்த கிராம மக்கள் பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து சுமார் 2 மணி நேரம் போராடி யானைகளை காட்டுக்குள் விரட்டினர். யானை புகுந்ததில் நெல் பயிர், மாமரங்கள், சோளம் ஆகியவை நாசமானது. யானைகள், குடியாத்தம் அடுத்த மோர்தானா காப்புக்காட்டில் இருந்து பேரணாம்பட்டு முதுகூர் பகுதிக்கு வந்தது தெரியவந்தது. மேலும், யானைகளின்  அட்டகாசத்தால் கிராம மக்கள்  விடியவிடிய தூங்காமல் பீதியில் உறைந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.