காவிரி மகாபுஷ்கர விழா 2வது நாளாக பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி வரும் 24ம் தேதிவரை காவிரி மகா புஷ்கரம் விழா நடைபெறுகிறது. இதில் காவிரியில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். 2வது நாளாக நேற்று தோஷங்கள் நீங்கும் நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. சிதம்பரம் தீட்சிதர்கள் தலைமையில் சிறப்பு ஹோமம், கடம் புறப்பட்டு சிதம்பரம் அன்னபூரனி அம்பாள் சமேத அன்னபூரீஸ்வரர் உற்சவ மூர்த்திகள் காவிரிதுலாக்கட்டத்திற்கு எழுந்தருளி காவிரியில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், பெல்ஜியம், ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு பக்த குழுவினர் வந்து, புஷ்கர விழாவை கண்டுகளித்தனர். பின்னர், காவிரியை வணங்கி வழிபட்டனர். இதேபோல் ரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும் பக்தர்கள் புனித நீராடினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.