சசிகலாவை சிறையில் சந்தித்த விவகாரம் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு பைசல்

மதுரை: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரை சேர்ந்தஆணழகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பெங்களூரூ சிறையில் உள்ள சசிகலாவை, கடந்த பிப். 28ல் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் சந்தித்தனர். அதிமுக செய்தி தொடர்பாளர் கவுரிசங்கர், சசிகலாவின் வழிகாட்டுதலின்படி அரசு நடப்பதாக பேட்டி அளித்திருந்தார். எனவே, முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவர்களது எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதியிழப்பு ெசய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் தரப்பில் தனித்தனியே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ரகசிய காப்பு உறுதிமொழியை மீறவில்லை’ என கூறப்பட்டிருந்தது. முதல்வர் தாக்கல் செய்த பதில்மனுவில், ‘நான் சசிகலாவை சந்திக்கவில்லை’ என கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், மேலும் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை என்பதால் மனுவை பைசல் செய்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.