சிஆர்பிஎப் முகாமில் பயிற்சி எஸ்.ஐ. தற்கொலை

பெ.நா.பாளையம்:  கோவை துடியலூரை அடுத்த கதிர்நாயக்கன்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி பள்ளி (சிஆர்பிஎப்) உள்ளது. இந்த மையத்தில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரியானா மாநிலம் ரிவாரி மாவட்டத்தை சேர்ந்த சந்தீப்(25), ஒரு ஆண்டு எஸ்.ஐ பயிற்சிக்கு வந்திருந்தார். இன்னும் 10 நாளில் இவரது பயிற்சி முடிய இருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை பயிற்சி மைய வளாகத்தில் உள்ள மரத்தில் சந்தீப் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.