டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு மார்க்சிஸ்ட் முற்றுகை போராட்டம்

திருச்சி: திருச்சியில் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள 10300 என்ற டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டு, தற்போது அதே நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி திறக்கப்பட்டது. இதையடுத்து இந்த கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோட்டோ போலீசார் போராட்டகாரர்களை தடுத்துநிறுத்தினர். அவர்களிடம் போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முதற்கட்டமாக டாஸ்மாக் கடை உடனே மூடப்பட்டது. மேலும் இது தொடர்பாக கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இன்று (13ம்தேதி) பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள், மீறி கடையை திறந்தால் தொடர் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.