வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயர்வு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 496.69 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 87.60 புள்ளிகள் உயர்ந்து 32,246.26 புள்ளிகளாக உள்ளது. ஆற்றல், சுகாதாரம், மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் & எரிவாயு, ஐ.டி மற்றும் பொதுத்துறை நிறுவனம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21.25 புள்ளிகள் அதிகரித்து 10,114.30 புள்ளிகளாக உள்ளது.ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.03%, ஹாங்காங்கின் ஹாங் செங் 12.03% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.47% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.28% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.