சொந்த மண்ணில் அசத்தல் உலக லெவனை வீழ்த்தியது பாக்.

லாகூர்: சொந்த மண்ணில் உலக லெவன் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாதுகாப்பு காரணம் கருதி, பாகிஸ்தான் பயணத்தை கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தவிர்த்து வருகின்றன. இதை மாற்றும் வகையிலும், மற்ற நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், உலக லெவன் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட சுதந்திர கோப்பை டி20 தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது. முதல் போட்டி லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற உலக லெவன் அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன் குவித்தது. அதிரடியாக ஆடிய பாபர் அசாம் 52 பந்தில் 86 ரன்னும், சோயப் மாலிக் 20 பந்தில் 38 ரன்னும் விளாசினர். பந்துவீச்சில் பெரேரா 2, மார்க்கல், கட்டிங், தஹிர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 198 ரன் இலக்குடன் ஆடிய உலக லெவன் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. கேப்டன் டுபிளஸ்சி 29, சம்மி 29*, அம்லா 26, பைனி 25 ரன் எடுத்தனர். 2வது போட்டி இன்று லாகூரில் நடக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.