கார் விபத்தில் தப்பினார் ரெய்னா

புதுடெல்லி: துலீப் டிராபியில் களமிறங்கும் இந்தியா நீலம் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா, கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி தப்பினார். தனது ரேஞ் ரோவர் காரில் காஜியாபாத்தில் இருந்து கான்பூர் கிரீன் பார்க் ஸ்டேடியத்துக்கு சென்றபோது, பின் பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. மிதமான வேகத்தில் சென்றதால் பெரிய சேதமின்றி தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், வேறு காரில் அவர் ஸ்டேடியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.