பொதுக்குழுவை நாங்கள் விரைவில் கூட்டுவோம்

மன்னார்குடி: அதிமுக பொதுக்குழுவை நாங்கள் விரைவில் கூட்டுவோம் என்று திவாகரன் கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் தம்பி திவாகரன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பினரால் கூட்டப்பட்டுள்ள பொதுக்குழுவே செல்லாது என தீர்ப்பு வரும் பட்சத்தில் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாமல் ஆகிவிடும். அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தான் நீடிக்கிறார். உண்மையான தொண்டர்கள் சசிகலா பக்கமும் டிடிவி தினகரன் பக்கமும் தான் உள்ளனர். விரைவில் பொதுக்குழுவை முறைப்படி கூட்டுவோம். தற்போது தமிழகத்தில் எம்எல்ஏக்களையும் விலைக்கு வாங்க குதிரை பேரம் நடைபெறுகிறது. ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டிய கவர்னர் கண்டு கொள்ளாமல் உள்ளது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை. டிடிவி தினகரன் நியமித்துள்ள நிர்வாகிகளுக்கு தொண்டர்களிடையே உள்ள செல்வாக்கை பொறுத்துக்கொள்ள இயலாமல் அவர்கள் மீது எதிர்தரப்பினர் பொய் வழக்கை போடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போடுகின்ற பொய் வழக்குகளை சட்டப்படி நங்கள் சந்திப்போம் என்று கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.