நீட் பயிற்சி என்ற பெயரில் பணம் வசூல் தனியார் பள்ளிகள் மீது விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் புகழ்பெற்ற தனிப்பயிற்சி நிறுவனங்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் கல்விக் கட்டணம், தனிப் பயிற்சிக் கட்டணம் என மாணவர்களிடம் ரூ.3 லட்சம் வரை பள்ளிகள் வசூலிக்கின்றன. இதைவிடக் கொடுமை என்னவென்றால் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர இயலாத மாணவர்களிடம் காட்டப்படும் பாகுபாடு தான். பயிற்சியில் சேராத மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தீண்டத்தகாத  மாணவர்களாக நடத்தப்படுகின்றனர். இத்தகைய வழிமுறைகளை தனியார் பள்ளிகள் கடைபிடிப்பது கண்டிக்கத்தக்கது.ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மட்டும் நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் ரூ.10,000 கோடி வருவாய் ஈட்டுகின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு பள்ளியும் தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் தான் வசூலிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதும், பயிற்சியில் சேராத மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதும் மன்னிக்க முடியாத குற்றங்கள். இதை மத்திய மாநில அரசுகளும், சி.பி.எஸ்.இ மற்றும் மெட்ரிகுலேசன் கல்வித்திட்ட இயக்குனரகமும் அனுமதிக்கக்கூடாது. இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.