டெக்சாஸ், புளோரிடாவை புரட்டிப்போட்ட இர்மா புயல் : 6 லட்சம் கோடி அளவுக்கு பெரும் சேதம்

நியூயார்க்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய இர்மா சூறாவளி பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கரிபியன் தீவுகளை சூறையாடிய இர்மா சூறாவளி நேற்று முன்தினம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. அப்போது மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் பலத்த கனமழையும் பெய்தது. இதன் காரணமாக மாகாணத்தின் சரிபாதிக்கு மேற்பட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. லட்சக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்க்கப்பட்டுள்ளன. துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றொன்று மோதி உருக்குலைந்து கிடக்கின்றன. சாலையில் சென்றுக்கொண்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன. சூறாவளி தாக்கிய கீஸ் தீவை உட்பட புளோரிடா மாகாணம் முழுவதும் மின் விநியோகம் தடைப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 70 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதால் பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் இர்மா சூறாவளி ஆடிய தாண்டவத்தால் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. உருக்குலைந்துள்ள கட்டமைப்புகளை புனரமைக்க 2 மாதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.