வைரல் வீடியோ: நீருக்கடியில் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் நீச்சல் வீராங்கனை!

ரஷ்யாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஒருவர் தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த கிறிஸ்டினா மகுஷென்கோ என்பவர் புகழ்பெற்ற நீச்சல் வீராங்கனையாக உள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சலனமற்ற வண்ணமயமான நீருக்கடியில் இசைக்கேற்ப, வில்லாக வளைந்து, அம்பு போல அந்தரத்தில் பாய்ந்து ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சிகள் பார்ப்போரை வெகுவாக ஈர்த்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.  

View this post on Instagram

A post shared by Kristina Makushenko (@kristimakusha)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.