எனக்கு மகள் பிறந்ததை யாரிடமும் சொல்லவில்லை; தோனி என் பந்தில் ஆட்டமிழந்தபோது நான் சந்தோஷப்படவில்லை: ‘யார்க்கர்’ நடராஜன் பெருமிதம்

கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி எனக்கு வழங்கிய அறிவுரைகளான, ஸ்லோ பவுன்ஸர் வீசுவது, அதிகமான கட்டர்களை வீசுவது போன்ற விஷயங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன என்று தமிழக வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரரான யார்க்கர் நடராஜன் தெரிவித்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைவராலும் கவனிக்கப்பட்டார். யார்க்கர் வீசுவதில் வல்லவரான நடராஜன், கடந்த ஐபிஎல் தொடரில் 71 யார்க்கர்களை வீசியுள்ளார். இதில் முக்கியமாக எம்எஸ் தோனி விக்கெட்டையும், 360 டிகிரி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸுக்கு யார்க்கர் மூலம் ஸ்டெம்ப்பைத் தெறிக்கவிட்டு ஆட்டமிழக்கச் செய்தது இன்றளவும் பேசப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.