கொரோனா அதிகரிப்பு: இந்தியர்களுக்கு தடை விதித்த நியூசிலாந்து.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், இங்கிருந்து நியூசிலாந்து நாட்டுக்கு செல்லும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தொற்று பரவியதை போன்று மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் வெளிநாடுகள் சில கட்டுப்பாடுகளை விதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.


 இந்நிலையில், இந்தியாவில் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், இங்கிருந்து செல்லும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் 28ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது இந்தியா வந்துள்ள நியூசிலாந்து மக்களுக்கும் பொருந்தும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.