வாக்களித்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி: முத்தரசன் அறிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெருகிவரும் பேராதரவை தடுக்கும் அரசியல் சதி வேலைகளில் மதவெறி, சாதிவெறி, சுயநலக் கும்பல், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை ஏற்ற திமுக மீதும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் பகையுணர்வு பரப்புரை மேற்கொண்டன. தமிழக மக்களின் உணர்வை பிரதிபலித்த முழு நிறைவான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டது. இந்தத் தேர்தல் அறிக்கை தமிழகத்தின் ஒட்டு மொத்த ஆதரவையும் பெற்று முன்னேறியது.கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கி.வீரமணி, ராகுல் காந்தி, கே.எஸ்.அழகிரி, வைகோ, சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், கே.பாலகிருஷ்ணன், டி.ராஜா, திருமாவளவன் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளூர் தலைவர்களும், பல்லாயிரம் ஊழியர்கள் மற்றும் செயல் வீரர்களும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு சோர்விலாது பணியாற்றியதற்கும், தேர்தலில் பங்கேற்று வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் இதயபூர்வ நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.