ஏழுமலையான் தரிசனம் நாளை 5 மணி நேரம் ரத்து

திருமலை ஏழுமலையான் தரிசனம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயில் ஆண்டுக்கு 4 முறை சுத்தப்படுத்தப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெறுவதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் தேவஸ்தானம் இதை செய்து வருகிறது.

அதன்படி வரும் ஏப்.13-ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி கொண்டாடப்பட உள்ளது.

எனவே அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையான ஏப்ரல் 6-ஆம் தேதி ஏழுமலையான் கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட உள்ளது.

இதை முன்னிட்டு காலை 6 மணி முதல் 11 மணிவரை தேவஸ்தானம் ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்துள்ளது. அன்று மதியம் 12 மணிக்கு பிறகு பக்தா்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது.

தினமணி இணையப் பதிப்பு - சந்தா செலுத்த: epaper.dinamani.com
Dinamani

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.