புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மிகவும் பிரபலமாக பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் புகழ். இவர் சமையல் செய்யும் போது பல்வேறு வகையிலான காமெடிகளை செய்வார். அதுவும் ரம்யா பாண்டியனுடன் இணைந்து கலக்கி வருவார். இதனால் அந்த நிகழ்ச்சியை காண்பதற்காக இளைஞர் பட்டாளம் காத்துக் கொண்டிருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.


 இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது தயாராகி வருகிறது. இதில் வழக்கம் போன்று கோமாளியாக ரசிகர்களை சிரிக்க வைக்க புகழ் தயாராகியுள்ளார்.

இதனிடையே புகழ் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது திரைப்படங்களிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.


 இந்நிலையில், சின்னத்திரை, வெள்ளித்திரையில் பிஸியாக வலம் வரும் புகழ், தற்போது சொந்தமாக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த கார் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் சொல்லியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.