இங்கிலாந்தில் மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

பிரிட்டன்: மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் 4 அம்ச திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். அதன் முதல் திட்டத்தின் படி வரும் 8 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 2 பேர் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதற்கு அனுமதியளிக்கப்படுவர் என்றவர், மார்ச் 26 முதல் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.