தேர்தல் சீட்டுக்காக உளவுத்துறையிடமே கையேந்தும் அதிமுகவினர்

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. விருப்ப மனுக்களும் அதிமுக தலைமை வாங்கி வருகிறது. அதிமுகவை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் விருப்ப மனு அளித்து வருகின்றனர். மேலும் தனக்கு வேண்டியவர்களை பிடித்து எப்படியாவது எம்எல்ஏ சீட் வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க உளவுத்துறையிடம் விரைவில் அறிக்கையை அதிமுக தலைமை கேட்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் தொகுதியில் தங்களின் செல்வாக்குகளை காட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறனர்.குறிப்பாக தொகுதியில் உள்ள மூத்த கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுதல், தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுதல், கட்சி சார்பில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கட்சி தலைமை உளவுத்துறை அறிக்கை கேட்டால் தங்களை பற்றி நல்ல விதமாக தெரிவிக்க வேண்டும் என்று கூறி உளவுதுறை போலீசாரிடம் அதிமுக நிர்வாகிகள் படையெடுத்து வருகின்றனர். மேலும் உளவுதுறையில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களிடம் சிபாரிசு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். சிலர் ஒருபடி மேலே சென்று உளவுதுறை போலீசார் கொடுக்கும் ஐடியாவிலும் கட்சி பணியாற்றி வருகின்றனர். எப்படியும் எம்எல்ஏ சீட்டு வாங்கிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் அதிமுக நிர்வாகிகள் பல்வேறு கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.