வீடு கட்டியப்பின் வாஸ்து தோஷம் ஏற்பட்டால் சரி செய்வது எப்படி?

 வாஸ்து என்பது கட்டிட வடிவமைப்பு மாத்திரமல்ல. வீடு, அலுவலகம் தொடங்கி எந்த ஒரு கட்டிட வடிவமைப்பாக இருந்தாலும் அதை வாஸ்து பார்த்து அமைப்பார்கள். காரணம், அந்த இடத்தில் நல்ல அதிர்வுகளை அதிகப்படுத்த வேண்டும். அந்த செயல்முறைக்கு முறையாக வகுக்கப்பட்ட சாஸ்திரம் தான் வாஸ்து.  புதிதாக வீடு அலுவலகம் போன்ற கட்டிடங்களை கட்ட துவங்குபவர்கள் ஆரம்பத்திலிருந்தே வாஸ்துவின் படி கட்டத் துவங்குவார்கள். அதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

ஆனால் பெரும்பாலானவர்கள் கட்டிய வீடுகள் அல்லது கட்டிய இடத்திற்கு செல்லும் சூழல் ஏற்படும். அப்போது அங்கே எதிர்பாராதவிதமாக வாஸ்து தோஷம் ஏற்படுகிறது. இதுபோன்ற வாஸ்து தோஷங்கள் அல்லது நமக்கே தெரியாதவாறு சில வாஸ்துவின் தவறுகள் நடக்கிறபோது சின்ன சின்ன விஷயங்களை கவனம் செலுத்துவதன் மூலம் நல்ல அதிர்வுகளை நம் வீட்டிற்குள் கொண்டு வர முடியும்.

வாஸ்துவை சரி செய்வதில் பல விதமான வழிமுறைகள் உண்டு. அதில் ஒன்று குறிப்பிட்ட அம்சங்களின் உருவம் அல்லது படம் ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்களை சரி செய்ய முடியும். அந்த வகையில் ஏராளமான வாஸ்து பொருட்களில் முக்கியமானது ஓடும் குதிரையினுடைய படம். ஓடும் குதிரை என்பது வலிமை வேகம் ஆகியவற்றை குறிப்பதால் தொழில் வாழ்க்கையில் வெற்றி பதவி உயர்வு போன்றவற்றை விரும்புபவர்கள் ஓடும் குதிரையினுடைய படத்தை வீட்டில் வடக்கு திசை நோக்கி வைத்திருப்பது மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது.

அடுத்து நீங்கள் பணம் புகழ் பெரிய பெயர் இதற்கு நோக்கி பணியாற்றுபவர் எனில் குதிரை பொம்மையை அல்லது சிலையை  தென் புறமாக வைப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும். இரு கால்களை உயர்த்தி கணைப்பதை போன்ற  குதிரை உருவம் உங்கள் வீட்டில் இருந்தால் அதற்கு தவறியும்  நீங்கள் மாற்று வண்ணம் பூசி விட வேண்டாம். இருக்கும் நிறத்திலேயே  அதை வைத்து பராமரிப்பது தான் நன்மையைத் தரும். தென்புறம் நோக்கி வைக்க சொல்ல கூடிய பொருட்களை இடப் பற்றாக்குறை காரணமாகவோ அல்லது மற்ற காரணத்தினால் வைக்க முடியாத சூழலில் வாஸ்து பொருட்களை ஜன்னல் அருகில் வைப்பது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.