கர்நாடகாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்து! 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

கர்நாடகா மாநிலம், ஷிவமோகா மாவட்டத்தில் வெடிபொருட்கள் ஏற்றி சென்ற லாரி வெடித்து சிதறியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

ஷிவமோகா மாவட்டத்தில், கல் குவாரிகள் ஏராளமாக உள்ளது. இந்த குவாரிகளில் பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர்கள் மற்றும் டைனமைட் என்ற வெடிமருந்துகளை எடுத்து செல்வது வழக்கம்.

அதே போன்று நேற்று நள்ளிரவு ஒரு லாரியில் டைனமைட் என்ற வெடிபொருட்களை ஏற்றிசென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக லாரி தீப்பிடித்த காரணத்தினால் டைனமைட் வெடிபொருட்கள் உடனடியாக வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.

லாரி வெடித்து சிதறியதால் அருகாமையில் உள்ள வீடுகளின் ஜன்னல்கள் அனைத்து நொறுங்கி விழுந்துள்ளது. மேலும், சாலைகள் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தால் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அம்மாவட்ட ஆட்சியர் சிவக்குமார் கூறியுள்ளார். இந்த உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தை தொடர்ந்து மாநில அமைச்சர்கள் ஷிமோகாவுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.