118 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு விநியோகம்

இந்திய உணவுக்கழகத்தின் அறிக்கையின் படி, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மூன்று மாதத்துக்கான உணவு தானியங்களாக, மொத்தமாக 118 லட்சம் மெட்ரிக் டன் ஐ இந்திய உணவுக்கழகத்தின் டிப்போக்கள்/ மத்தியத் தொகுப்பிலிருந்து, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளுக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை வழங்குவதற்காக பெற்றுள்ளன.

2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்துக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மொத்தமாக 111.52 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை (93.5%) விநியோகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய உணவுக் கழகத்தின் அறிக்கைப்படி, 2020 ஏப்ரல், மே மாதங்களுக்கு மாதந்தோறும் 75 கோடி பயனாளிகளுக்கு , 37.5 லட்சம் மெட்ரிக் டன் (94%) உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.