திமுக அறிவித்ததால் தானே அரசு கல்வி கட்டணத்தை ஏற்றிருக்கிறது: சேலத்தில் மு.க.ஸ்டாலின் உரை

சேலம்: சேலத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். கல்வி கட்டணத்தை திமுக ஏற்றது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். திமுக அறிவித்ததால் தானே அரசு கல்வி கட்டணத்தை ஏற்றிருக்கிறது. திமுக ஆளும் கட்சியாக செயல்படுகிறது என்பதை சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். உள்இடஒதுக்கீடு மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் கல்வி கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என அறிவித்தோம் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.