204 ரன்னில் சுருண்டது இலங்கை

காலே: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்திருந்தது. நேற்று அந்த அணி மேற்கொண்டு 91 ரன் மட்டுமே சேர்த்து எஞ்சிய 9 விக்கெட்டையும் பறிகொடுத்தது. நிஸங்கா 73, கருணரத்னே 42, மேத்யூஸ் 29, ஒஷதா 18 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் வீராசாமி பெருமாள் 5, ஜோமெல் வாரிகன் 4, சேஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன் எடுத்த நிலையில், கனமழை காரணமாக 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பிளாக்வுட் 44 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட் 22 ரன், என்க்ருமா போனர் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.