Electoral Bond:``கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான வழிதான் தேர்தல் பத்திரம் - சொல்கிறார் பிரதமர் மோடி!

கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர் எனப் பலரும் அரசியல் கட்சிகளுக்கு எளிதாக நிதியளிப்பதற்காக 2018-ல் தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) திட்டத்தை பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. `தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் சட்டத்துக்கு முரணானது. தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19 (1) (a)-க்கு எதிரானது என இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதே நேரம், தேர்தல் பத்திர விவரங்களையும் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் பத்திர விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

பிரதமர் மோடி

அதில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மட்டும் மொத்தம் ரூ.6,986.5 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றிருக்கிறது. இதில் அதிகத் தொகையாக ரூ.2,555 கோடியை 2019-20-ல் பெற்றிருக்கிறது. இந்த தகவல் வெளியானதிலிருந்துல் ஆளும் பா.ஜ.க அரசு ஊழலில் ஈடுபட்டிருக்கிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``தேர்தல் பத்திரங்கள் ரத்து - பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. ஆனால், இந்த திட்டத்துக்கு நேர்மையான பிரதிபலிப்பு கிடைக்கும்போது அனைவரும் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு வருத்தப்படுவார்கள்.

இந்த சட்டம் ரத்து நாட்டை முழுவதுமாக கறுப்புப் பணத்திற்கு தள்ளியுள்ளது. நம் நாட்டில் நீண்ட நாள்களாக ஒரு விவாதம் நடந்து வருகிறது. அதுதான் கறுப்புப் பணம். தேர்தல் நேரத்தில் அந்த கறுப்புப் பணம் பல ஆபத்தான விளையாட்டுகளை விளையாட பயன்படுத்தப்படுகிறது. அந்த பணம்தான் தேர்தலிலும் செலவிடப்படுகிறது... யாரும் மறுக்கவில்லை. அனைத்து கட்சிகளும், அனைத்து வேட்பாளர்களும் செலவழிக்கிறார்கள். எனது கட்சியும் செலவு செய்கிறது... ஆனால், அந்தப் பணம் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டது.

பிரதமர் மோடி

அதை சரிசெய்வதற்கு, கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு நாங்கள் ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தோம். அந்த வழிதான் தேர்தல் பத்திரம். இது முழுமையான தீர்வு என ஒருபோதும் கூறவில்லை, எந்த அமைப்பும் 100 சதவிகிதம் சரியானதல்ல. அதில் இருக்கும் குறைபாடுகள் மேம்படுத்த முடியும். எனது அரசால் தொடங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம், கறுப்புப் பணத்தை எதிர்த்துப் போராடியது. ஆனால் அதைப் பற்றி எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்புகின்றனர்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.