கர்நாடகா பிரச்சாரத்தில் ஒரு பழ வியாபாரியை சந்தித்துப் பாராட்டிய பிரதமர்.. யார் அவர்..என்ன காரணம்..?

இதுவரை லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுகள் இரண்டு கட்டங்களாக முடிந்துள்ள நிலையில் அடுத்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் உத்தரகாண்ட் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள ஹெலிகாப்டரில் பிரதமர் சென்றார்.�

அப்பொழுது அவர் ஹெலிபேடில் இறங்கியதும் முதலில் ஸ்ரீமதி மோகினி கவுடாவை சந்தித்து சில நிமிடங்கள் உரையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீமதி மோகினி யார் என்பது குறித்து பார்க்கும்பொழுது அவர் அங்கோலாவை சேர்ந்த ஒரு பெண்மணி ஆவார். மேலும் இவர் தினமும் அங்கோலா பேருந்து நிலையத்தில் பழங்களை இலைகளில் சுற்றி விற்பனை செய்துவரும் ஒரு வியாபாரி.�

பலர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீமதி மோகினி பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாமல் விற்பனை செய்வதோடு, அவற்றை வாங்கி உண்ணும் சிலர் இலைகளைப் பேருந்திற்கு வெளியே வீசிவிட்டு செல்கிறார்கள். அப்படி பயணிகள் வெளியே வீசும் இலைகளை மோகினியே எடுத்து குப்பைத் தொட்டியில் போடும் பண்பை கொண்டுள்ளார்!�

இந்த பண்பிற்காகவே பிரதம நரேந்திர மோடி அவரை முதலில் சந்தித்து அவரது பணிக்காக பாராட்டியுள்ளார்.�

Source : Asianet news Tamil�

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.