“பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை!” - ரேவண்ணா வீடியோ விவகாரத்தில் பாஜகவுக்கு ‘குறி’

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில், கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் தொடங்கி திரிணமூல் காங்கிரஸ் வரை பாஜகவை குறிவைத்துள்ளன. “பிரஜ்வல் ரேவண்ணாவால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். 3,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள், மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளன” என்று காங்கிரஸ் காட்டமாக தெரிவித்துள்ளது.

கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். கடந்த 26-ம் தேதி நடந்த மக்களவை 2-ம் கட்ட தேர்தலில், இவர் ஹாசன் மக்களவை தொகுதியிலிருந்து தே.ஜ.கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அதில் உள்ள பெண், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தனக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ஹாசன் மாவட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.