‘ஸ்டராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் பழுதின்றி செயல்பட நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு

சென்னை: ‘தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழுதுமின்றி முழுமையாக இயங்க வேண்டும். ‘ஸ்ட்ராங் ரூம்’ அமைந்துள்ள பகுதிகளில் டிரோன் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “ நீலகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்திருக்கக் கூடிய ஸ்ட்ராங் ரூமில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் கடந்த 27-ம் தேதியன்று 20 நிமிடங்களுக்கு இயங்கவில்லை. தொடர்ச்சியாக அந்த சிசிடிவி கேமராக்கள் இயங்கி வந்ததால், மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டு சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்று நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் ஓர் அறிக்கை கொடுத்திருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.