New Zealand: `நாங்க ரெடி! சிறுவர்கள் அறிவித்த உலகக்கோப்பை அணி - முழுப் பட்டியல் இதோ!

டி20 உலகக்கோப்பைக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 29 ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெற இருக்கிறது. இதனிடையே  டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கவுள்ள 20 அணிகளும் மே 1ஆம் தேதிக்குள் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து, ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. அந்தவகையில் நியூசிலாந்து அணிக்கு மீண்டும் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.  தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா,டேரல் மிட்சல், ஜேம்ஸ் நீஷம், மார்க் சேப்மேன், பிரேஸ்வெல், ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நட்சத்திர வீரர் கிளென் பிலிப்ஸ் விக்கெட் கீப்பர், சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்களாக சான்ட்னர், இஷ் சோதி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக போல்ட், சவுதி, ஹென்ரி, ஃபெர்குசன் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Join special guests Matilda and Angus at the squad announcement for the upcoming @t20worldcup in the West Indies and USA. #T20WorldCup pic.twitter.com/6lZbAsFlD5

— BLACKCAPS (@BLACKCAPS) April 29, 2024

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இம்முறை இரண்டு சிறுவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து நியூசிலாந்து அணி வீரர்களை அறிவிப்பதுபோல் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அவர்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த முறை நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வீரரின் குடும்ப உறுப்பினர்களும் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.