`மதம் மாறினால் ரூ.10 கோடி..! - தனிச்செயலி மூலம் நூதன முறையில் ரூ.4.80 லட்சம் மோசடி | உஷார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் ஐ.எம்.ஓ என்ற தனிச்செயலி மூலம் சொக்கநாதன் என்ற ஐ.டியில் இருந்து தொடர்பு கொண்டுப் பேசிய ஒருவர், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூ.10 கோடி பணம் தருவதாகக் கூறியுள்ளார். மேலும், இதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்கிடவும், வருமானவரி செலுத்திடவும் கட்டணமாக கட்ட வேண்டும் எனச் சொல்லி  பணம் கேட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ராஜவேல்

அதனை நம்பிய கோவில்பட்டி இளைஞர், ரூ.4,88,59-ஐ ஜிபே மூலம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு சொக்கநாதன் என்ற ஐ.டியில் இருந்து எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து, தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த இளைஞர் தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த மோசடி குறித்து விசாரணை செய்ய மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். இதனையடுத்து சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி உன்னிகிருஷ்ணனின் மேற்பார்வையில் சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் ஜோஸ்லின் தலைமையிலான போலீஸார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். இதில், தஞ்சாவூர், ஆனந்தம் நகரைச் சேர்ந்த ராஜவேல் என்பவர்தான் மோசடியாக கோவில்பட்டி இளைஞரிடம் பணம் பறித்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

பாலாஜி சரவணன் - மாவட்ட எஸ்.பி

இதனையடுத்து போலீஸார் ராஜவேலை கைது செய்தனர். “கவர்ச்சிகரமான வாசகங்கள், விளம்பரங்கள், பண முதலீட்டு திட்டங்கள் என சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து மோசடி செய்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இது போன்றவற்றை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்” என மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.