``அன்று CSK மேட்ச்சை வெளியிலிருந்து பார்த்தேன் ஆனால்... - சேப்பாக்கம் குறித்து நெகிழ்ந்த நடராஜன்

தமிழக வீரரான நடராஜன் நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

சென்னைக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் ஆட சன்ரைசர்ஸ் அணி வந்திருந்தது. சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியின் போது நடராஜன் சேப்பாக்கம் மைதானம் பற்றிய தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். சேப்பாக்கம் மைதானத்துக்கு அருகே இருக்கும் இரயில் நிலையத்திலிருந்து ஜன்னல் துளை வழியாகப் பார்த்தால் மைதானத்தின் ஒரு பகுதி தெரியும். அதன்மூலம் அரைகுறையாக ஆட்டத்தைப் பார்க்கலாம்.

நடராஜன்

இப்போதும் சேப்பாக்கத்தில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியின் போதும் இரயில் நிலையத்தில் அந்த துளையருகே ஒரு இளைஞர் கூட்டம் நின்று ஏக்கத்துடன் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும். நடராஜனும் இப்படி போட்டியை பார்த்திருப்பதாக நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.நடராஜன் பேசுகையில், மின்சார ரயிலில் சேப்பாக்கம் வழியாக செல்லும்போது முதல்முறையாக அங்குள்ள துளை வழியாகதான் இந்த மைதானத்தைப் பார்த்தேன்.

அப்போது இதற்குள் நம்மை விடுவார்களா? நாமெல்லாம் இங்கு விளையாடுவோமா? என நினைத்திருக்கிறேன். ஒரு முறை லீக் போட்டியில் விளையாடிவிட்டு, ஊர் திரும்பும்போது CSK vs RCB போட்டியை அதே துளை வழியாகத்தான் பார்த்தேன். அடுத்த 2, 3 ஆண்டுகளிலேயே இங்கு விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மைதானத்தில் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.

நடராஜன்

என்னுடைய மறக்க முடியாத தருணம் என்றால் டொமெஸ்டிக் சீசனில் இந்த மைதானத்தில் வைத்து ஃபாஸ்ட் பவுலராக 5 விக்கெட்டுகளை எடுத்திருந்ததுதான். நிறைய பயிற்சிகளை நான் இங்கு எடுத்திருக்கிறேன். என் நண்பர்களுடன் அதிகளவு நேரத்தை இங்கு செலவிட்டிருக்கிறேன். இந்த மைதானம் எனக்கு எப்போதும் ஸ்பெஷலான ஒன்றுதான்” என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.