Hardik Pandya: ஹர்த்திக் எந்தவித ஆதரவுமின்றி தனியாகக் களத்தில் நிற்கிறார் -ஆடம் கில்கிறிஸ்ட்

மும்பை அணி நிர்வாகம், ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவைக் கேப்டனாக நியமித்தது இன்றுவரை ரசிகர்களால் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

பலரும் ரோஹித்திற்கு ஆதரவாகவும், ஹர்திக்கிற்கு எதிராகவும் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். "கேப்டனை நியமிப்பது முழுக்க முழுக்க மும்பை அணி நிர்வாகத்தின் முடிவு. எனக்குக் கொடுப்பட்ட பொறுப்பைச் சிறப்பாகச் செய்வதைத் தவிர வேறென்ன என்னால் செய்யமுடியும்" என்று ஹர்த்திக் விமர்சனங்களுக்கு விளக்கமளித்த பிறகும், ரசிகர்கள் தொடர்ந்து அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஹர்திக் மைதானத்தில் களமிறங்கும்போது அவருக்கு எதிராக கோஷங்கள் போட்டு எதிர்ப்பைத் தெரிவிப்பது எல்லா போட்டிகளும் நிகழ்ந்து வருகிறது.

ஹர்த்திக்

இந்நிலையில் கடந்த சிஎஸ்கே - மும்பை அணியிகளுக்கிடையானப் போட்டியில் மும்பை அணியின் தோல்வி குறித்து பேசிய ஹர்த்திக், "ஸ்டெம்பிற்குப் பின்னால் இருப்பவர் (தோனி), அணியின் வீரர்கள் என்ன செய்ய வேண்டுமென்ற அறிவுரைகளை வழங்குகிறார். அவரது ஆதரவு அவர்களின் வெற்றிக்குப் பெரும் உதவியாக இருக்கிறது" என்று கூறியிருந்தார். ஹர்த்திக்கின் இந்த வார்த்தைகள் தோனியைப் புகழ்வதாக இருக்கிறது என்று பலரும் நெகிழ்ச்சியாக இதைப் பார்த்தனர்.

ஆனால், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், மிகச் சிறந்த விக்கெட் கீப்பருமான ஆடம் கில்கிறிஸ்ட், தோனி குறித்த ஹர்த்திக் பேசியதைப் பார்க்கும் போது, ஹர்த்திக் எந்தவித ஆதரவுமின்றி தனியாக இருப்பதை உணர முடிகிறது என்று கூறியுள்ளார். இது பற்றி மனம் திறந்து பேசியுள்ள கில்கிறிஸ்ட், “தோனி பற்றி ஹர்த்திக் பேசியது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

ஹர்த்திக்

ஆனால் அதேசமயம், ஹர்த்திக் எந்தவித ஆதரவுமின்றி தனித்து நிற்கும் ஒரு ஓநாயைப் போல இருப்பதை அவரது வார்த்தை மூலம் உணர முடிகிறது. அவரது எதிரணியில் இருக்கும் சிஎஸ்கே-வின் புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அனுபவமிக்க முன்னணி வீரர் உதவியாக இருக்கிறார். ஆனால், ஹர்த்திக்கிற்கு அதுபோன்ற ஆதரகவுகள் எதுவுமில்லை என்பதே அவரின் வார்த்தைகளில் உணர முடிகிறது” என்று கூறியுள்ளார். 

ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருப்பது போல ஹர்திக் பாண்டியா ஆதரவில்லாமல் தனியாகக் களத்தில் நிற்கிறாரா? உங்கள் கருத்தை கமென்ட்டில் தெரிவியுங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.