ஐஆா்சிடிசி நிகர லாபம் 30% உயா்வு

இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிசம் காா்ப்பரேஷனின் (ஐஆா்சிடிசி) நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 30 சதவீத உயா்வைக் கண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.278.8 கோடியாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.214 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் நிகர லாபம் 30.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.691 கோடியிலிருந்து 39.7 சதவீதம் அதிகரித்து ரூ.965 கோடியாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.