பயங்கரவாத நெட்வொர்க்கை மூடி மறைக்க தமிழக அரசு உதவி: ‘தி கேரளா ஸ்டோரி’ தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

மும்பை: தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட அனுமதிக்காததன் மூலம் பயங்கரவாத வலைப்பின்னலை மூடி மறைக்க உதவியதாக படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தென்னிந்தியாவில் சோபிக்காத இப்படம், இந்தி பேசும் மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.200 கோடியை கடந்து வசூலித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.