`லியோ’ காஷ்மீர் ஷெட்யூல் ஓவர்; அடுத்து..? - தினேஷ் மாஸ்டர்; ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-21, 2022! LiveUpdates

சிறந்த குணச்சித்திர நடிகர் 2022 - காளி வெங்கட்!

2022-ம் ஆண்டின் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது... பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமிருந்து, `கார்கி’ படத்துக்காக காளி வெங்கட் பெற்றுக்கொண்டார்.

என் காதல் சக்சஸ் ஆகிடுச்சு! - கலை இயக்குநர் த.இராமலிங்கம்

2020-21-ம் ஆண்டின் சிறந்த கலை இயக்கத்துக்கான விருது... தயாரிப்பாளர் தியாகராஜன் வழங்க, சார்பட்டா பரம்பரை திரைப்படத்துக்காக த.இராமலிங்கம் பெற்றுக்கொண்டார்.

`` காலா, கபாலி திரைப்படத்துக்காக விகடன் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் . நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இப்போது கிடைத்திருக்கிறது. ஒருதலையாக காதலித்த பெண் இப்போது பதில் சொன்னதுபோல் இருக்கிறது.’’ - கலை இயக்குநர் த.இராமலிங்கம்.

கலை இயக்குநர் த.இராமலிங்கம்

`கேப்டன் மில்லர்’ அப்டேட்!

``70% படப்பிடிப்பு தென்காசியில் நடக்கிறது. இதற்காக பெரிய செட் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த பகுதியில் படப்பிடிப்பு முடிந்துவிடும். பிறகு சென்னையிலும் ஊட்டியிலும் படப்பிடிப்பு தொடரும்.’’ - தயாரிப்பாளர் `சத்யஜோதி’ தியாகராஜன்.

சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன்!

2022-ம் ஆண்டுக்கான சிறந்த ஒளிப்பதிவு விருது... ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் வழங்க பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக ரவி வர்மன் பெற்றுக்கொண்டார்.

ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்

Red Carpet Exclusive Interview

லியோ அப்டேட்..!

2020-21-ம் ஆண்டின் சிறந்த நடன இயக்கத்துக்கான விருது... தயாரிப்பாளர் தனஞ்செயன் வழங்க, மாஸ்டர் திரைப்படத்துக்காக நடன இயக்குநர் தினேஷ் பெற்றுக்கொண்டார்.

`விகடன் விருது வழங்கும் விழா’ மேடையில், வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய நடன இயக்குநர் தினேஷ்.

லியோ அப்டேட்:

``காஷ்மீர் பகுதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். ஏப்ரல் மாதம் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.’’ - நடன இயக்குநர் தினேஷ்

தினேஷ் மாஸ்டர்

`தங்கலான்’ அப்டேட்!

``KGF-ல், `தங்கலான்’ படம் பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. ஓய்வே இல்லாமல் இயக்குநர் பா.இரஞ்சித் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார். ஸ்டூடியோ கிரீனின் அடுத்த ரிலீஸ், `தங்கலான்’தான்.’’ - தயாரிப்பாளர் தனஞ்செயன்

தனஞ்செயன்

``சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு...”

`தாஜ்மஹால்’ படத்தின் அடி நீ எங்கே... பாடலை ஸ்ரீனிவாஸ் மேடையில் பாட, அரங்கமே நாஸ்டால்ஜியா உணர்வில் திளைத்தது...

பாடகர் ஸ்ரீனிவாஸ்

”அடியே நீதானே...”

2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை பாடகர் ஸ்ரீனிவாசனிடமிருந்து, `பேச்சுலர்’ படத்தின் அடியே நீதானே பாடலுக்காக கபில் கபிலன் பெற்றுக்கொண்டார்.

கபில் கபிலன்

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 2022 - ஏகா லக்கானி! 

2022-ம் ஆண்டுக்கான சிறந்த ஆடை வடிவமைப்பு விருதை, ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தன் வழங்க `பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்காக ஏகா லக்கானி பெற்றுக்கொண்டார்!

ஏகா லக்கானி

”நெசவாளர்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்!” - ஏகன் ஏகாம்பரம்

2020-21... சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை ஆடை வடிவமைப்பாளர் அனு வர்தன் வழங்க சார்பட்டா பரம்பரை திரைப்படத்துக்காக ஏகன் ஏகாம்பரம் பெற்றுக்கொண்டார்!

”நான் நெசவாளர் குடும்பத்தில் இருந்து வந்தவன். இந்த விகடன் விருதை நெசவாளர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்!” - ஏகன் ஏகாம்பரம்!

சிறந்த குழந்த நட்சட்திரம் 2020 - 21

2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை நடிகர் விமல் வழங்க, மண்டேலா திரைப்படத்துக்காக முகேஷ் பெற்றுக்கொண்டார்.

சிறந்த குழந்தை நட்சத்திரம்: மண்டேலா படத்துக்காக முகேஷ்

’கிச்சான்னாலே’ கலக்கல்தான் - `விலங்கு’ வெப் சீரீஸ் குழுவினர்!

2022-க்கான சிறந்த வெப் சீரீஸ் விருதை இயக்குநர் எழில் வழங்க, விலங்கு வெப் சீரீஸுக்காக படக்குழு பெற்றுக்கொண்டது.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் ’விலங்கு’ வெப் சீரீஸ் அணியினர்!

`விலங்கு’ வெப் சீரீஸ் எங்கள் அனைவருக்கும் ஒரு மறுபிறவி - நடிகர் விமல்!

`ஐந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய `புருஸ் லீ’ திரைப்படம் வெளியானது. ஆனந்த விகடன் விமர்சனதுக்காக ஆர்வமாகக் காத்திருந்தேன். ஆனால், அந்தத் திரைப்படத்துக்கு விகடன் விமர்சனம் எழுதவில்லை. விகடனில் 48 மதிப்பெண் பெற வேண்டும் என்று விலங்கு வெப் சீரீஸில் ஆர்வமாக உழைத்தேன். இப்போது அதை வாங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.’’ - புன்னகையுடன் இயக்குர் பிரஷாந்த் பாண்டியராஜ்.

சிறந்த வெப் சீரீஸ் - நவம்பர் ஸ்டோரி!

2020-21-க்கான சிறந்த வெப் சீரீஸ் விருதை, இயக்குநர் எழில் வழங்க நவம்பர் ஸ்டோரி வெப் சீரீஸுக்காக இயக்குநர் இந்திரா சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார்.

Sema Vibe-ல்  குடும்பத்தினருடன் குழந்தை நடசத்திரம் ஹியா தவே

”57 ஆண்டுகள் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்!”

2020-21... சிறந்த ஓப்பனைக்கான விருதை `சார்பட்டா பரம்பரை’ படத்துக்காக தசரதன் பெற்றார். நடிகை ரம்யா பாண்டியன் அவருக்கு விருதை வழங்கினார்.

”57 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். இப்போது விகடன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.” - தசரதன் நெகிழ்ச்சி

ஆனந்த விகடன் சினிமா விருதுகளில் ஒப்பனைக் கலைஞர் தசரதன்

சினிமா விருதுகள் விழாவில் நடிகை ரோகிணி!

நடிகை ரோகிணி

சிறந்த ஒப்பனைக் கலைஞர் - `சார்பட்டா பரம்பரை‘ தசரதன்

ஆனந்த விகடன் சினிமா விருதுகளில் ஒப்பனைக் கலைஞர் தசரதன்

The Grand Stage is all set!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் மேடை!

`சோழர்களின்’ ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானி ! 

ஆனந்த விகடன சினிமா விருதுகளில் ஏகா லக்கானி

சிறந்த குழந்தை நட்சத்திரம் - 2022

குழந்தைகளை பயமுறுத்துவதற்குப் பேய்க்கதைகள் சொல்வார்கள். குழந்தையின் வழியே அதே பேய்க்கதை, வளர்ந்த நம்மை பயமுறுத்தி நடுங்கச் செய்தால்... செல்வராகவனின் ’நானே வருவேனி’ல் ஹியா தவே மூலம் செய்தது அதுதான். தேர்ந்த நடிகர்களுக்கு இணையாகத் தன்னையும் அதே தளத்தில் வெளிப்படுத்திக்கொண்ட ஹியாவின் திறமையை அங்கீகரிக்கிறது ஆனந்த விகடன்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஹியா தவே

2022-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல்!

சிறந்த படம் - நட்சத்திரம் நகர்கிறது; சிறந்த இயக்குநர் - மணிகண்டன் (கடைசி விவசாயி); சிறந்த நடிகர் - கமல்ஹாசன் (விக்ரம்); சிறந்த நடிகை சாய் பல்லவி (கார்கி); சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் (கோப்ரா, பொன்னியின் செல்வன்-1, வெந்து தணிந்தது காடு); சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகிபாபு (லவ் டுடே); சிறந்த வில்லன் - லால் (டாணாக்காரன்); சிறந்த வில்லி - ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன்-1);

சிறந்த குணச்சித்திர நடிகர் - காளி வெங்கட் (கார்கி); சிறந்த குணச்சித்திர நடிகை - கீதா கைலாசம் (நட்சத்திரம் நகர்கிறது); சிறந்த அறிமுக இயக்குநர் - தமிழ் (டாணாக்காரன்); சிறந்த அறிமுக நடிகர் - கிஷன் தாஸ் (முதல் நீ முடிவும் நீ);

சிறந்த அறிமுக நடிகை - அதிதி ஷங்கர் (விருமன்); சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஹியா தவே (நானே வருவேன்); சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன்-1); சிறந்த படத்தொகுப்பு - பிரதீப் இ.ராகவ் (லவ் டுடே); சிறந்த கதை - தீபக், முத்துவேல் (விட்னஸ்); சிறந்த திரைக்கதை - ஹரிஹரன் ராஜு, கெளதம் ராமச்சந்திரன் (கார்கி); சிறந்த வசனம் - தமிழரசன் பச்சமுத்து (நெஞ்சுக்கு நீதி);

சிறந்த பாடலாசிரியர் - விவேக் (அன்பரே, சண்ட வீரச்சி); சிறந்த பின்னணிப் பாடகர் - ஏ.ஆர்.ரஹ்மான் (மறக்குமா நெஞ்சம்); சிறந்த பின்னணிப் பாடகி - மதுஸ்ரீ (மல்லிப்பூ); சிறந்த கலை இயக்கம் - தோட்டா தரணி (பொன்னியின் செல்வன்-1); சிறந்த ஒப்பனை - விக்ரம் கெய்க்வாட் (பொன்னியின் செல்வன்-1); சிறந்த சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன் (வலிமை); சிறந்த நடன இயக்கம் - ஜானி (மேகம் கருக்காதா); சிறந்த ஆடை வடிவமைப்பு - ஏகா லக்கானி (பொன்னியின் செல்வன்-1);

சிறந்த அனிமேஷன் - விஷுவல் எபெக்ட்ஸ் NY VFXWAALA (பொன்னியின் செல்வன்-1); சிறந்த தயாரிப்பு பொன்னியின் செல்வன்-1 (லைகா புரொடக்‌ஷன்ஸ் & மெட்ராஸ் டாக்கீஸ்); சிறந்த படக்குழு - விக்ரம்; சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - லவ் டுடே; Best Entertainer - லோகேஷ் கனகராஜ்; சிறந்த வெப்சீரீஸ் - விலங்கு;

2022 ஆண்டுகளுக்கான விருது பெறுபவர்கள் யார், யார்?

2020-2021 ஆண்டுகளுக்கான விருது பெறுபவர்கள் யார், யார்?

தமிழ் சினிமாவுக்கு மணிமகுடம் சூட்டும் திருவிழா!

2020-21, 2022-ம் ஆண்டுகளுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா சென்னை வர்த்தக மையத்தில் இன்னும் சற்று நேரத்தில்...

ஆனந்த விகடன் சினிமா விருதுகள்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.