ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர்  ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தென்னரசுவை அதிமுக வேட்பாளராக நிறுத்த ஒப்புதல் கேட்டு அவைத் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளதாக ஜெயக்குமார் தகவல் அளித்துள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இருதுருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரு தரப்பினரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேவேளை ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவதாக அறிவித்தார். இந்நிலையில் இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது . உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர் வழங்கும் கடிதங்களை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ளதாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கடிதம் அனுப்பியுள்ளார். இதில் அவரை ஆதரிக்காதவர்கள் மாற்று வேட்பாளர் பெயரையும் பட்டியலில் குறிப்பிட அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆலோசனையில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.