வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை மட்டும் மற்றவர்களுக்கு காட்டவே கூடாது. வீட்டிற்கு வருபவர்களின் கண்களில் நேரடியாக படக்கூடாத பொருட்கள் என்னென்ன.

கள்ளம் கபடம் இல்லாமல் சில பேர் மற்றவர்களிடம் பழகுவார்கள். எதை அடுத்தவர்களிடம் சொல்லுவது, எதை அடுத்தவர்களிடம் சொல்லக்கூடாது என்று தெரியாமல் சொல்லிவிடுவார்கள். எந்த பொருளை அடுத்தவர்களுக்கு காட்டுவது, எதை அடுத்தவர்களுக்கு காட்டக் கூடாது என்ற அடிப்படையான பக்குவம் கூட சிலருக்கு இருக்காது. அவர்களை குத்தம் குறையும் சொல்ல முடியாது. அவர்கள் வெகுளியானவர்கள். ஆனால் சில விஷயங்களில், சில நாசுக்கான மறைவு இருக்கத்தான் வேண்டும். பெரியவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். நண்பர்களை யாரையாவது வீட்டிற்கு அழைத்து வந்தால் கூட ஹாலிலேயே உட்கார வைத்து பேசி அனுப்பு. வீட்டிற்குள், அதாவது சமையலறை, படுக்கையறை வரை அவர்களை அழைத்துச் செல்லாதே என்று. இந்த வார்த்தையை சொல்லிவிட்டால் இன்றைய காலத்து இளைஞர்களுக்கு கோபம் வருகிறது. ஆனால் அவர்கள் சொல்லும் அந்த விஷயத்திற்கு பின்னால் நிறைய அர்த்தம் இருக்கிறது. அது சில நாட்களைக் கடந்த பின்பு தான் நமக்கு புரியும்.

bedsheet1

வீட்டில் அடுத்தவர்களுக்கு காட்டவே கூடாத பொருட்கள் என்னென்ன?
ஒருவர் கண் போல ஒருவர் கண் இருக்காது. மண்ணைத் தின்றால் கூட, மறைத்து தின்னு, என்று ஒரு பழமொழி உள்ளது. சில விஷயங்களை நீங்கள் செய்யும் போது அதை மறைத்து தான் செய்தாக வேண்டும். அந்த வரிசையில் பிறருக்கு நம்முடைய வீட்டில் காட்டக் கூடாத இடம் எது, பிறருக்கு நம் வீட்டில் இருக்கும் எந்தெந்த பொருட்களை காட்டவே கூடாது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

நம்முடைய சந்தோஷம் எதுவாக இருந்தாலும், அதை வெகுளித்தனமாக அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளவே கூடாது. நமக்கு கணவர் ஆசையாக வாங்கிக் கொடுத்த பொருள், அல்லது நாம், நம் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்த பொருள் அல்லது நம்முடைய அம்மா அப்பா நமக்காகவே வாங்கி கொடுத்த ஆடம்பர பொருட்கள் என்று தங்கம் வெள்ளி விலை உயர்ந்த ஆடைகள் இருக்கும் அல்லவா அதை அடுத்தவர்களிடம் மொத்தமாக காட்டி பெருமைப்பட்டுக் கொள்ளவே கூடாது.

வீட்டில் உங்களுடைய குழந்தைகள் நன்றாக படித்து, அழகான கையெழுத்துடன் நோட்டுப் புத்தகங்களை வைத்திருந்தால், அதைக் கொண்டு போய் மற்ற பிள்ளைகளின் அம்மாவிடமோ அல்லது தெரிந்தவர்களிடமும், உங்கள் பிள்ளை படிப்பை பற்றி உயர்த்தி பேசவே கூடாது. நீங்கள் சேமித்து வைக்கின்ற சேமிப்பு உண்டியல் பணம் இவைகளைப் பற்றி அடுத்தவர்களிடம் பேசக்கூடாது. உங்களுடைய சேமிப்பு தொகை எவ்வளவு என்பது அடுத்தவர்களுக்கு ஒரு போதும் தெரியவே கூடாது. அது எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையை கொண்டு வந்து சேர்க்கும். கண் திருஷ்டி படுவது ஒரு பக்கம் இருந்தாலும், பலதரப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நாம் தப்பிக்க, பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை பலரோடு பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

சமையலறையில் கிலோ கணக்கில் வாங்கி வைத்திருக்கும் மளிகை ஜாமான்கள் அப்படியே அடுத்தவர்கள் கண்களில் படும்படி வைக்கவே கூடாது. அரிசி மூட்டையை கூட. பூஜை அறையில் உங்களுடைய அலங்காரத்தை அடுத்தவர்கள் பார்க்க வேண்டும் என்று வீட்டிற்கு வருபவர்களை அழைத்து வந்து சுவாமி அறையை காட்டவே கூடாது.

kitchen

குறிப்பாக படுக்கையறை. கணவன் மனைவி படுத்து தூங்க கூடிய மெத்தை, பாய் தலையணை இவைகளை வெளியில் இருந்து வருபவர்கள் பயன்படுத்தவே கூடாது. படுக்கையறைக்கு அனாவசியமாக மூன்றாவது நபரை அழைத்துச் செல்லவே செல்லாதீங்க. அடுத்தவர்கள் தப்பாக நினைத்துக் கொண்டால் கூட பரவாயில்லை. படுக்கை அறைக்கு கதவு இருக்கும் அதை சாத்தி எப்போதும் தாழ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

gold

ரொம்பவும் நெருங்கியவர்கள் உறவினர்கள் என்று இருந்தால் கூட சில விஷயங்களை அவர்களிடம் சொல்லுவதை தவிர்த்து விடுங்கள். அது உங்களுடைய குடும்பத்திற்கு நன்மையை கொடுக்கும். மேலே சொன்ன விஷயத்தை படித்து விட்டு எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். அப்போது வீட்டிற்கு யாரையும் அழைத்து வர கூடாதா. வீட்டை யாருக்கும் சுற்றி காட்டக் கூடாதா என்று. ஆனால் மேல் சொன்ன தவறுகளை எல்லாம் நீங்கள் செய்யும் போது, அடுத்து ஒரு சில நாட்களில் உங்களுடைய வீட்டில் எதிர்பாராத சில எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படும். அதன் பிறகு கஷ்டப்பட்டு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து பாருங்கள். அந்த பராசக்தி தாயே நேரில் வந்து உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை விரட்டி விடுவாள்.

வெகுளித்தனமாக இருப்பது தவறு என்று சொல்ல வரவில்லை. வெகுளித்தனத்தின் மூலம் வாழ்க்கையை இழந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த குறிப்புகளை அந்த காலம் முதல் பெரியோர்களால் சொல்லப்படுகிறது. நம்முடைய தாத்தா பாட்டி சொன்ன விஷயங்கள் ஒருபோதும் பொய்த்ததில்லை என்ற கருத்தை முன் நிறுத்தி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

The post வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை மட்டும் மற்றவர்களுக்கு காட்டவே கூடாது. வீட்டிற்கு வருபவர்களின் கண்களில் நேரடியாக படக்கூடாத பொருட்கள் என்னென்ன. appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.