வாரிசு திரைப்படத்தின் ‘தீ தளபதி’ விடியோ வெளியானது! 

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் தீ தளபதி பாடல் விடியோ வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜ் படங்களில் ஆங்கிலப் பாடல்களை எழுதும் ஹெஸ்சன்பர்க் யார்?  ஆரம்பத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கினாலும் வசூலில் எந்தப் பாதிப்பும் ஆகவில்லை.குறிப்பாக, 11 நாளில் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது ரூ.300 கோடியை நெருங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தமனின் அதிரடியான இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. ரஞ்சிதமே லிரிக்கல் விடியோ யூடியூபில் 17 கோடி பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.  தீ தளபதி லிரிக்கல் விடியோ 5.8 கோடி பார்வைகளை கடந்துள்ளது. நடிகர் சிம்பு இந்தப் பாடலை பாடியுள்ளதும் பாடலிம் மற்றுமொரு சிறப்பம்சம்.  இதையும் படிக்க: ‘ஒளியைக் கண்டேன்’- சமந்தாவின் இன்றைய வைரல் பதிவு!  இந்நிலையில், தீ தளபதி பாடல் விடியோ வெளியாகியுள்ளது. வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற பிப்.22 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.   

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.