பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

 

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நீதி ஆயோக் நிா்வாக குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், நடக்கும் இந்த கூட்டத்தில் தேசியக் கல்விக் கொள்கை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. 

நீதி ஆயோக்கின் 7-ஆவது நிா்வாகக் குழு கூட்டத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

படிக்க |  சாதி கலவரம்? 5 நாள்களுக்கு இணைய சேவை முடக்கம்

இக்கூட்டத்தில் மாற்றுப்பயிா்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல்,  உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

கடந்த 2019, ஜூலை மாதத்துக்குப் பின் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் முதல் முறையாக நேரடியாக நடைபெறுகிறது. கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நேரடியாக நடைபெறாமல் இருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.